கொவிட்-19: சீனாவில் புதிய உச்சம்

கொவிட்-19: சீனாவில் புதிய உச்சம்

1 mins read
acd0239d-2b86-49c6-9ef4-75d7a83d0e56
-

பெய்­ஜிங்: சீனா­வில் புதிய உச்­ச­மாக கிட்­டத்­தட்ட 20,000 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. முன்­ன­தாக ஏப்­ர­லில் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

கொவிட்-19 கிரு­மியை முற்­றி­லும் அழிப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­களை நாடு அமல்­ப­டுத்தி வரும் நிலை, அதி­கா­ரி­க­ளுக்­குப் பெரும் சுமை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

தனிமை உத்­த­ர­வுக்­கான காலத்­தைக் குறைத்­தல், ஒட்­டு­மொத்­த­மா­கக் கிரு­மிப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ளு­தல் என சீனா அதன் கொவிட்-19 உத்­தி­பூர்வ அணு­கு­மு­றையை மாற்­றிக்­கொண்­ட­தால் பொரு­ளி­ய­லும் மக்­க­ளின் அன்­றாட வாழ்க்­கை­யும் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், அண்­மைய கிரு­மித்­தொற்று நில­வ­ரம் சீனா­வின் கொவிட்-19 அணு­கு­மு­றைக்­குச் சவால் விடுப்­ப­தாக உள்­ளது. இதற்­கி­டையே, ஷாங்­காய் டிஸ்னி ரிசோர்ட்­டின் ஒரு­சில பகு­தி­கள் இன்­று­முதல் செயல்­ப­டத் தொடங்­கி­னா­லும் அதன் மைய­மான 'டிஸ்­னி­லேண்ட் பூங்கா' தொடர்ந்து மூடி­யி­ருக்­கும் என்று தெரிவிக்கப்பட்டது.