சந்திரனை நோக்கி 'நாசா' அதன் அடுத்த தலைமுறை 'ஆர்டமஸ்' விண்வெளி ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ச்சியுள்ளது. 32 மாடி உயரத்தில் நிற்கும் இந்தச் சோதனை ஓட்ட ஏவுகணை மனிதர்களின்றி பாய்ச்சப்பட்டதென அறியப்படுகிறது. நிலவைச் சுற்றி மும்முறை வலம் வந்தபின் மீண்டும் பூமிக்குத் திரும்பும் மூன்று வாரச் சோதனை ஓட்டப் பயணம் இதுவாகும். தொழில்நுட்பக் கோளாறுகள், அடுத்தடுத்த சூறாவளிகள் என பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணையை விண்ணில் பாய்ச்சுவதற்குக் கிட்டத்தட்ட 10 வாரங்கள் தாமதமாகியுள்ளது. 'ஆர்டமஸ்' என்ற பழங்காலத்து கிரேக்கப் பெண் கடவுளின் பெயரைக் கொண்ட இந்த ஏவுகணை, 2025ல் விண்வெளி வீரர்களை நிலவுக்குக் கொண்டுசெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது.
படம்: ராய்ட்டர்ஸ்

