டுவிட்டரைவிட்டு விலகும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள்

டுவிட்டரைவிட்டு விலகும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள்

1 mins read
d51ad2f4-b0aa-4867-9187-9924c1c423e3
-

டுவிட்டர் நிறுவனத்தைவிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வெளியேற முடிவெடுத்துள்ளனர்.

ஊழியர்கள் நீண்டநேரத்திற்கு கடுமையாக உழைக்கவேண்டும் அல்லது வேலையிலிருந்து விலகவேண்டும் என் டுவிட்டர் உரிமையாளர் எலன் மஸ்க் முன்னதாகக் கூறியிருந்தார்.

டுவிட்டர் நிறுவனத்தில் தொடர்ந்து பணியில் நீடிக்க பெரும்பாலான ஊழியர்கள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

நிறுவனத்தை வாங்கிய மஸ்க் முன்னதாக நிறுவனத்தின் ஊழியர் அணியில் பாதிப் பேரை பணிநீக்கம் செய்தார்.

ஊழியர்கள் வேலையைவிட்டு விலகுவது குறித்து தனக்கு கவலையில்லை என மஸ்க் குறிப்பிட்டார்.

வேலையைச் சிறப்பாக செய்பவர்கள் தொடர்ந்து நிறுவனத்தில் இருக்க விரும்புவதாக அவர் கூறினார்.