40 வயதில் குடியுரிமை, 42 வயதில் முதல் வாக்களிப்பு

40 வயதில் குடியுரிமை, 42 வயதில் முதல் வாக்களிப்பு

1 mins read
543e5233-3aa1-4327-8e10-431299417eba
42 வயது ராஜலட்சுமி சுப்பையாவும் (வலது) அவரது மகளான 19 வயது கீர்த்திகா குமரேந்திரனும் இன்று முதல்முறையாக வாக்களிக்கின்றனர். படம்: தி ஸ்டார் நாளிதழ் -

பெட்­டா­லிங் ஜெயா: இன்று நடை­பெ­றும் மலே­சி­யப் பொதுத் தேர்­

த­லில் 42 வயது ராஜ­லட்­சுமி

சுப்­பையா வாக்­க­ளிக்­கி­றார்.

பொதுத் தேர்­த­லில் இவர் வாக்­க­ளிப்­பது இதுவே முதல்­முறை. மலாக்கா மாநி­லத்­தில் வளர்ந்து தொடக்­க­நிலை, உயர்­நிலை, உயர்கல்வி ஆகி­ய­வற்றை முடித்­த­போ­தி­லும் இரண்டு ஆண்டு­க­ளுக்கு முன்­பு­தான்

இவ­ருக்கு மலே­சி­யக் குடி­யு­ரிமை கிடைத்­தது. இவ­ரது தந்தை மலே­சி­யர், தாயார் இந்­திய நாட்­ட­வர்.

தமது தாயார் இந்­தி­யா­வில் உள்ள அவ­ரது கிரா­மத்­துக்­குச் சென்று தம்­மைப் பெற்­றெ­டுத்­த­தாக ராஜ­லட்­சுமி தெரி­வித்­தார்.

தமது பிறப்பை மலே­சி­யா­வில் பதிவு செய்­யும் முக்­கி­யத்­து­வத்தை தமது பெற்­றோர் அப்­போது அறிந்­தி­ருக்­க­வில்லை என்­றார் இவர்.

நீண்­ட­கா­லப் போராட்­டத்­துக்­குப் பிறகு, தமக்கு மலே­சி­யக் குடி­யு­ரிமை கிடைத்­த­தாக இவர் கூறி­னார். ராஜலட்சுமியைப் போலவே அவரது மகளான 19 வயது கீர்த்திகா குமரேந்திரனும் இன்று முதல்முறையாக வாக்களிக்கிறார்.