'நேர்மையற்றவர், துரோகி, இனவெறியர் பிரதமராகக்கூடாது'
லங்காவி: நேர்மையற்ற, துரோகம் இழைக்கும், இனவெறி உணர்வு கொண்ட வேட்பாளர்கள் மலேசியாவின் அடுத்த பிரதமராகக்கூடாது என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
எதிர்தரப்பில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளர்களைக் குறிவைத்து லங்காவியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கெராக்கான் தானா ஆயர் கூட்டணியின் தலைவரான டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறினார்.
"அவர்கள் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். மக்கள் அவர்களுக்கு வாக்களித்தால் நாடு சீரழிந்துவிடும்," என்று அவர் தெரிவித்தார்.
பாடாங் சிராய் வாக்களிப்பு
டிசம்பர் 7க்கு ஒத்திவைப்பு
அலோர் ஸ்டார்: கெடா மாநிலம், பாடாங் சிராய் தொகுதியில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இருந்தது. அவ்களில் மலேசிய இந்தியர் காங்கிரஸின் சிவராஜ் சந்திரனும் ஒருவர். இந்நிலையில், அங்கு பக்கத்தான் ஹரப்பான் சார்பாக களமிறங்கிய கருப்பையா முத்துசாமி கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தின்போது மாரடைப்பு காரணமாக மாண்டார். இதனால், அத்தொகுதிக்கான வாக்களிப்பு அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 24ஆம் தேதியன்று நடைபெறும்.

