ரஃபிசி: வாக்களிப்பு விகிதம் அதிகமாக இருந்தால் பக்கத்தான் ஹரப்பான் வெல்லும்

ரஃபிசி: வாக்களிப்பு விகிதம் அதிகமாக இருந்தால் பக்கத்தான் ஹரப்பான் வெல்லும்

2 mins read
42dc1bb7-0172-409b-8818-a9ea83011dee
-

பெட்­டா­லிங் ஜெயா: வாக்­களிப்பு விகி­தம் 80 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக இருந்­தால் பக்­கத்­தான் ஹரப்­பான் தேர்­த­லில் நிச்­ச­யம் வெல்­லும் என்று கெஅ­டி­லான்

கட்­சித் துணைத் தலை­வர் ரஃபிசி ராம்லி மிகுந்த நம்­பிக்­கை­யு­டன் தெரி­வித்­துள்­ளார்.

அவ்­வாறு நேர்ந்­தால் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி 100க்கும் மேற்­பட்ட தொகு­தி­க­ளைக் கைப்­பற்­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார். ஆனால் வாக்­களிப்பு விகி­தம் ஏறத்­தாழ 70 விழுக்­கா­டா­கப் பதி­வா­னால் பக்­கத்­தான் ஹரப்­பா­னுக்கு 90 முதல் 100 தொகு­தி­கள் மட்­டுமே கிடைக்­கும் என்­றார் அவர். ஆட்சி அமைக்க 112 தொகு­தி­கள் தேவைப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"அண்­மை­யில் நடை­பெற்ற மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல்­களில் பதி­வான வாக்­களிப்பு விகி­தத்­தை­விட இந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் வாக்­களிப்பு விகி­தம் அதி­க­மாக இருக்­கும் என நம்­பு­கி­றோம். வெவ்­வேறு மாநி­லங்­க­ளுக்­குச் செல்­லும் பேருந்­து­க­ளுக்­கான பயணச்சீட்டுகள் அனைத்­தும் விற்­கப்­பட்­டு­விட்­டன.

"அது­மட்­டு­மின்றி, சாலை­களில் போக்­கு­வ­ரத்து அதி­கமாக உள்­ளது. இவற்­றைப் பார்க்­கும்­போது வாக்­களிப்பு விகி­தம் அதி­க­மாக இருக்­கும் எனத் தோன்­று­கிறது," என்று திரு ரஃபிசி தெரி­வித்­தார்.

2018ஆம் ஆண்­டில் நடை­பெற்ற மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் வாக்களிப்பு விகிதம் ஏறத்தாழ

83 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

"தேர்­தல் நாளன்று பிற்­ப­கல் நேரத்­தில் மழை பெய்­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, அதற்கு முன்­ன­தாக வாக்­க­ளித்­து ­வி­டுங்­கள்," என்று வாக்­கா­ளர்­

க­ளைத் திரு ரஃபிசி கேட்­டுக்­கொண்­டார். வெற்றி பெறும் கூட்­டணியை நிர்­ண­யிப்­ப­தில் 18 வய­துக்­கும் 21 வய­துக்­கும் இடைப்­பட்ட வாக்­கா­ளர்­க­ளின் பங்கு முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும் என்­றார் அவர்.