மலேசியப் பொதுத் தேர்தலில் பல இந்தியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.
பத்து முனைப் போட்டி நிலவும் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சகோதர சகோதரிகள் நான்கு பேர் ஒன்றாகச் சென்று தேர்தலில் இன்று காலையில் வாக்களித்தனர்.
குடும்பமாகச் சென்று வாக்களிக்க முடிந்ததால் சாலினி தேவகிருஷ்ணன், கணேஷ் குமார், திவ்யாக்கரசி, சுந்தர தர்ஷிணி ஆகிய நால்வருக்கும் இது மறக்க முடியாத தேர்தல்.
நாவ்லரும் 20 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளையர்கள்.
வாக்களிக்கச் செல்லும் முன்னர் வாக்களிப்பது எப்படி என்பதை நன்கு ஆராய்ந்து தெரிந்துகொண்டதாக மாணவியான திவ்யாக்கரசி கூறினார்.
அவரது தம்பியான 20 வயது கணேஷ்குமார், வேட்பாளர்களின் விவரங்கள், அவர்களின் பின்னணி, தேர்தல் அறிக்கை ஆகியவற்றைத் தாங்கள் படித்ததாகக் கூறினார்.
ஆனால் தாம் ஒவ்வொருவரும் யாருக்காக வாக்களிக்கப் போகிறோம் என்பதை ரகசியமாக வைத்துக்கொண்டதாக அவர்களின் 29 வயது மூத்த அக்காள் சாலினி தேவி குறிப்பிட்டார்.
செய்தி: தி ஸ்டார்


