மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் ஜோகூரின் பாகோ நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவரான இவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணிக் கூட்டணி வேட்பாளர்களைவிட 10,000 வாக்குகளைக் கூடுதலாக பெற்றுள்ளார்.
திரு முகைதீன் 24,986 வாக்குகளைப் பெற்றார். பக்கத்தான் ஹரப்பானின் திரு இஸ்கந்தர் ஷா அப்துல் ரஹ்மான் 14,979 வாக்குகளையும் தேசிய முன்னணியின் திரு ரஸாலி இப்ராகிம் 14,426 வாக்குகளையும் பெற்றனர்.

