ர‌‌‌ஷ்யத் தாக்குதலால் கியவ் இருளில் மூழ்கும் அபாயம்

ர‌‌‌ஷ்யத் தாக்குதலால் கியவ் இருளில் மூழ்கும் அபாயம்

2 mins read
62ed27f3-6c47-493f-a458-13ba18d3ba6e
-

கியவ்: கியவ் நக­ரில் மின்­சார கட்­ட­மைப்பு முற்­றி­லு­மாக முடங்­கும் அபா­யம் உள்­ள­தாக அந்­ந­கர அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

கிட்­டத்­தட்ட நாட்­டின் பாதி எரி­சக்தி கட்­ட­மைப்பு ர‌ஷ்­யத் தாக்­கு­த­லில் சேத­ம­டைந்­து­விட்­ட­தாக உக்­ரே­னிய பிர­த­மர் டெனிஸ் ‌ஷம்­யல் சொன்­னார்.

சென்ற பிப்­ர­வரி மாதம் உக்­ரேன் ­மீ­தான தாக்­கு­த­லைத் தொடங்­கிய ர‌ஷ்யா, கடந்த சில வாரங்­களாக அந்­நாட்­டின் எரி­சக்தி கட்­ட­மைப்பை குறி­வைத்து தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கிறது.

இந்த வாரம் குறிப்­பாக, மின்­சார கட்­ட­மைப்­பு­மீது கடு­மை­யான வான்­வ­ழித் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டது ர‌ஷ்யா.

மிக­வும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள நக­ரங்­களில் ஒன்­றான கியவ்­வில் மின் தடை­யும் தண்­ணீர் பற்­றாக்­கு­றை­யும் காணப்­ப­டு­கிறது.

கியவ்­வைச் சுற்­றி­யுள்ள பல கிரா­மங்­களும் நக­ரங்­களும் இரு­ளில் மூழ்­கி­யுள்­ளன.

இந்நிலையில், மின் கட்­ட­மைப்பு முற்­றி­லு­மாக முடங்­கு­வது உள்­ளிட்ட பல்­வேறு ‌சூழல்­களை எதிர்­கொள்ள அதி­கா­ரி­கள் தயா­ராகி வரு­வ­தாக கியவ் நகர நிர்­வா­கத் துணைத் தலை­வர் மிக்­கோலா சொன்­னார்.

மின் கட்­ட­மைப்பு முற்­றி­லு­மாக முடங்­கி­விட்­டால் நக­ரத்­தை­விட்டு வெளி­யே­று­வது குறித்­தும் பரி­சீ­லித்து வரு­வ­தா­க அவர் சொன்­னார். அதே­ச­ம­யம் மின் உற்­பத்­தி­யைத் தொடங்­கு­வ­தற்­கான முயற்­சி­களும் அவற்­றுக்­கான சீர­மைப்பு ஏற்­பாடு­களும் நடந்து வரு­கின்றன என்­றார்.

ஏற்­கெ­னவே கடுங்­கு­ளிர் நில­வும் உக்­ரே­னில் வரும் நாள்­களில் கடுங்­கு­ளிர் வாட்டி எடுக்­கும். அப்­போது மின் தேவை மேலும் அதி­க­ரிக்­கும் என்­ப­தால் நிலைமை மேலும் மோச­ம­டைய வாய்ப்பு உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

தன் நாட்டின் எரி­சக்தி கட்­ட­மைப்பு மீதான ர‌ஷ்­யா­வின் தாக்­கு­தல்­களை தீவி­ர­வாத செயல் என்று உக்­ரேன் கண்­டித்­துள்­ளது. ஆனால், இந்த விமர்­ச­னங்­களை நிரா­க­ரித்த ர‌ஷ்யா, அமை­திப் பேச்­சு­வார்த்தை நடத்த உக்­ரேன் உடன்படாததற்கான பதி­லடி என்று கூறு­கிறது.