விலைவாசி உயர்வால் கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

விலைவாசி உயர்வால் கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read
47a463af-f7d6-4d0e-bef1-f78e8f5277a7
-

லண்­டன்: பிரிட்­ட­னில் விலை­வாசி உயர்வு கார­ண­மாக, கடை­களில் திரு­டு­வது கடந்த 12 மாதங்­களில் 18 விழுக்­காடு உயர்ந்­துள்­ளது.

40 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு பண­வீக்­கம் உயர்ந்­துள்ள பிரிட்­ட­னில் முக்­கிய உண­வு வகை­க­ளான ரொட்டி, பாஸ்தா போன்­ற­வற்­றின் விலை ஏற்­றம் கண்­டுள்­ளது.

இத­னால், மக்­கள் தங்­க­ளது அடிப்­ப­டைத் தேவை­க­ளைக்­கூட சமா­ளிக்க முடி­யா­மல் சிர­மப்­ப­டு­கின்­ற­னர்.

இனி­வ­ரும் நாள்­களில் பண­வீக்­கம் மேலும் மோச­மை­டை­யும் என்­ப­தால், திருட்­டுச் சம்­ப­வங்­களும் அதி­க­ரிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

எனவே, திருட்­டுச் சம்­ப­வங்­க­ளைத் தடுக்க கடைக்­கா­ரர்­கள் மிக­வும் விழிப்பு­டன் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ள­னர்.

வழக்­க­மாக மது­பா­னம் போன்ற விலை­யு­யர்ந்த பொருட்­களில் திருட்டு-தடுப்பு சாத­னங்­களை இணைக்­கும் கடைக்­கா­ரர்­கள், தற்­போது, வெண்­ணெய், பாலா­டைக்­கட்டி, சலவை சோப்பு, புரோட்­டீன் துண்­டு­கள் போன்ற சாதா­ரண பொருள்­கள் மீதும் அச்­சா­த­னங்­க­ளைப் பொறுத்­து­கின்­ற­னர். இவற்­றில் சில­வற்­றின் விலை வெறும் 2 பவுண்­டு­க­ளே­யா­கும். (3.27 வெள்ளி).

மளி­கைப் பொருட்­க­ளின் பண­வீக்­கம் இது­வரை இல்­லாத அள­வுக்­குக் கடந்த மாதம் 14.7 விழுக்­கா­டா­னது. இத­னால் வரு­டாந்­திர மளிகை செலவு சரா­சரி­யாக 682 பவுண்டு அதி­க­ரித்து உள்­ள­தா­கக் கணக்கிடப்படுகிறது.