பியோங்யாங்: வடகொரியாவில் இருந்து அமெரிக்காவை முழு அளவுக்குத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு பேசிய கிம் ஜோங் உன், "வடகொரியா, அணுவாயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும்.
"அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தல்கள் பகைமையை தொடரச் செய்கின்றன. இது அணுவாயுத தடையை எதிர்த்து பெரிய அளவில் சோதனை செய்ய வடகொரியாவைத் தூண்டுகிறது," என்றார்.
'ஹ்வாஸாங்-17' என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
அப்போது அதிபர் கிம், தம்முடைய மகளுடன் அங்கு இருந்ததாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கிம் ஜோங் உன்னின் அரசியல் வாரிசாக அவரது சகோதரி அல்லது நம்பிக்கைக்குரிய தளபதிகள் யாராவது தலைமை ஏற்கலாம் என்று பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், கிம்மின் இந்த நடவடிக்கை, தமது மகளை அவர் அரசியல் வாரிசாக கொண்டு வருவாரோ என்ற யூகங்களைக் கிளப்பியுள்ளது.

