தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனுக்கு 50மி. பவுண்ட் மதிப்பிலான உதவி: பிரதமர் ரிஷி சுனக்

1 mins read
aa8e24b8-4089-474c-be45-b592fbae8f93
படம்: ஏஎஃப்பி -

உக்ரேனுக்கு உதவ பிரிட்டன் 50 மில்லியன் பவுண்ட் உதவி வழங்கும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். கீயவ்வில் உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலன்ஸ்கியைச் சந்தித்த அவர், உக்ரேனுக்கு ஆதரவாக பிரிட்டன் இருக்கும் எனக் கூறினார்.

ஏவு­க­ணை­கள், வான் பாது­காப்பு அமைப்­பு­கள் உள்­ளிட்ட ஆயுதங்களை பிரிட்டன் உக்­ரே­னுக்கு அனுப்­பும். அதோடு, பிரிட்டன் ராணுவத்தில் உள்ள பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரும் உக்ரேனுக்கு உதவி செய்ய அங்கு அனுப்பப்படுவர்.

மேலும், போரால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுக்கு உணவு வழங்கவும், மருத்துவ சேவைகள் அளிக்கவும் 16 மில்லியன் பவுண்ட் உதவிநிதியை பிரிட்டன் அளிக்கும் என திரு சுனக் குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களாக உக்ரேன்மீது ரஷ்யப் படைகள் தாக்குதல்களை முடக்கியுள்ளன. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளிலிருந்து கூடுதல் உதவியை உக்ரேன் கோரிவந்துள்ளது.