நிலாவில் மனிதர்கள் நீண்ட காலத்திற்கு வசிக்கும் சாத்தியம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படலாம் என அமெரிக்க விண்கல, வான்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆர்டெமிஸ் எனப்படும் ராக்கெட் புதன்கிழமை அன்று விண்ணுக்கு பாய்ச்சப்பட்டது. நாசா நிறுவனம் பாய்ச்சியுள்ள ஆக சக்திவாய்ந்த ராக்கெட் ஆர்டெமிஸ் எனக் கருதப்படுகிறது. அது தற்போது நிலாவிலிருந்து கிட்டத்தட்ட 130,000 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ராக்கெட்டில் மனித உருவம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ராக்கெட்டில் மனிதர்கள் பயணம் செய்யும்போது ஏற்படும் தாக்கம், நிலாவின் சுற்றுச்சூழலால் மனித உடலுக்கு ஏற்படும் தாக்கம் போன்றவற்றை இந்த உருவத்தின் வழி நாசா ஆராயும். தற்போது நிலாவுக்கு பாய்ச்சப்பட்ட ஆர்டெமிஸ் ராக்கெட்டில் மனிதர்கள் கிடையாது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக நிலாவைச் சென்றடைந்தால், அடுத்தக் கட்ட முயற்சியில் விண்வெளி வீரர்கள் நிலாவுக்கு ராக்கெட்டில் பயணம் செய்வர் எனக் கூறப்பட்டது. 1972ல் விண்வெளி வீரர்கள் முதலில் நிலாவில் தரையிறங்கினர். அதுவே மனிதர்கள் நிலாவுக்குச் சென்ற முதலும், கடைசி பயணமாக இருந்தது.
நிலாவில் மனிதர்கள் கூடியவிரைவில் வசிக்கலாம்: நாசா
1 mins read
விண்வெளிக்கு பாய்ச்சப்பட்ட ஆர்டெமிஸ் ராக்கெட் (படம்: ராய்ட்டர்ஸ்) -


