அமெரிக்க கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஐவர் பலி

அமெரிக்க கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஐவர் பலி

1 mins read
fafb9264-9917-4287-9c23-04681226a0f9
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

அமெரிக்காவில் கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். கொலராடோ ஸ்பிரிங்ஸ் எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓரின சேர்க்கையாளர்கள் செல்லும் விடுதியான 'கிளாப் கூயூ'வில் சனிக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சந்கேக நபரை விடுதியில் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணத்தை காவல்துறை வெளியிடவில்லை. 2016ல், ஃபுளோரிடாவில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் செல்லும் விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் மாண்டனர். ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தனக்கு தொடர்பு இருந்ததாக துப்பாக்கிக்காரன் கூறினார். காவல்துறைக்கும் அவனுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், அவன் கொல்லப்பட்டான்.