கோலா சிலாங்கூர் தொகுதியில் அம்னோவின் ஸஃப்ருல் தோல்வி

கோலா சிலாங்கூர் தொகுதியில் அம்னோவின் ஸஃப்ருல் தோல்வி

1 mins read
66839da8-9bdb-4a0b-a84a-0fce8f271c0b
அம்னோவின் திரு ஸஃப்ருல் (வலது) 30,031 வாக்குகளையும் டாக்டர் ஸுல்கிஃப்லி 31,033 வாக்குகளையும் பெற்றனர். -
Google News Preferred Icon

மலேசியாவின் இடைக்கால நிதி அமைச்சராக இருந்த திரு ஸஃப்ருல் அஸிஸ், கோலா சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டியில் அமானா கட்சியின் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமதிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின்படி, அம்னோவின் திரு ஸஃப்ருல் 30,031 வாக்குகளையும் டாக்டர் ஸுல்கிஃப்லி 31,033 வாக்குகளையும் பெற்றனர்.

இத்தொகுதியில் போட்டியிட்ட மூன்றாமவரான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் முகம்மது நூர் ஷஹார் 23,639 வாக்குகளையும் பெஞ்சுவாங்கை சேர்ந்த மற்றொரு வேட்பாளர் வெறும் 1,778 வாக்குகளையும் பெற்றனர்.

2018ல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு ஸஃப்ருல், எதிர்க்கட்சி வசம் உள்ள சிலாங்கூரில் களமிறங்கினார்.

சுகாதார முன்னாள் அமைச்சரான டாக்டர் ஸுல்கிஃப்லி, 2013ல் முதன்முறையாக கோலா சிலாங்கூர் தொகுதியை வென்றிருந்தார்.