லங்காவி தொகுதியில் மகாதீர் தோல்வி; வைப்புத்தொகையை இழந்தார்

லங்காவி தொகுதியில் மகாதீர் தோல்வி; வைப்புத்தொகையை இழந்தார்

1 mins read
a62fb54f-c684-4cc8-8df6-461b42716c84
-
Google News Preferred Icon

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியுற்றார். 2018ல் அத்தொகுதியை இவர் கைப்பற்றியிருந்தார்.

இம்முறையில் இத்தொகுதியில் டாக்டர் மகாதீர் வெறும் 4,566 வாக்குகளைப் பெற்றுள்ளார். மாறாக, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்கத்தான் நேஷனலின் முகம்மது சுஹைமி அப்துல்லா, 25,463 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார்.

மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற டாக்டர் மகாதீர், வைப்புத்தொகையை இழந்தார்.

மலேசியாவின் ஆக வயதான வேட்பாளரான டாக்டர் மகாதீர், 97, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.