சிலாங்கூரின் சுங்கை புலோ தொகுதியை தன்வசமாக்கிக்கொள்ள அம்னோவின் கைரி ஜமாலுதீன் தவறியுள்ளார். இதனால் மலேசியப் பிரதமராக இவரது கனவு தவிடுபொடியாகிவிட்டது.
சுங்கை புலோவுக்குப் புதுவரவான திரு கைரியை பிகேஆர் கட்சியின் ரமணன் ராமகிருஷ்ணன் தோற்கடித்தார்.
இடைக்கால சுகாதார அமைச்சரான திரு கைரி, 48,250 வாக்குகளைப் பெற்றார். திரு ரமணன் 50,943 வாக்குகளைப் பெற்றார்.
சுங்கை புலோவில் நிலவிய ஏழு முனைப் போட்டியில் களமிறங்கிய மூன்றாமவரான பெரிக்கத்தான் நேஷனலின் முகம்மது கஸாலி முகம்மது ஹமின் 29,060 வாக்குகளைப் பெற்றார்.
எஞ்சிய நான்கு வேட்பாளர்கள் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றதால் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

