கோம்பாக் தொகுதி: குருவை தோற்கடித்த சிஷ்யன்

1 mins read
2879ddfc-64fb-47fa-bc0b-dbd5850705c0
இடைக்கால அமைச்சர் அஸ்மின் அலியும் (இடது) சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷஹ்ரியும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இடைக்கால அமைச்சர் அஸ்மின் அலியின் நிழலில் இனி தாம் நிற்கவில்லை என்பதை சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷஹ்ரி நிரூபித்துள்ளார். கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் தம்முடைய முன்னாள் மதியுரைஞரான திரு அஸ்மினை இவர் தோற்கடித்துள்ளார்.

இத்தொகுதியில் நிலவிய நான்கு முனைப் போட்டியில், பிகேஆர் கட்சியின் திரு அமிருடின் 12,729 வாக்கு வித்தியாசத்தில் திரு அஸ்மினை தோற்கடித்தார். இதன்மூலம் மூன்று தவணைகளாக கோம்பாக் தொகுதியில் திரு அஸ்மினின் பிடி நழுவிவிட்டது.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பெர்சத்து கட்சியின்கீழ் கோம்பாக் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள திரு அஸ்மின் முற்பட்ட வேளையில், இந்தத் தேர்தலில் அனைவரின் கண்களும் கோம்பாக் தொகுதி மீது இருந்தன.