பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம், 75, பேராக்கின் டம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் வாகை சூடியுள்ளார்.
இத்தொகுதியில் நிலவிய நான்கு முனைப் போட்டியில் 3,736 வாக்குகள் பெரும்பான்மையுடன் இவர் வெற்றி பெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட திரு அகமது ஃபைசல் அஸுமுவை திரு அன்வார் தோற்கடித்துள்ளார்.
திரு அன்வாரின் இந்த வெற்றியின்மூலம் தம்புன் தொகுதி பக்கத்தான் ஹரப்பான் கோட்டையாகியுள்ளது.
பேராக்கில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் திரு அன்வார் போட்டியிடுவது இதுவே முதன்முறை.
பேராக்கில் உள்ள 24 தொகுதிகளில் தம்புன் தொகுதியே ஆக அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் 160,558 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

