சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் பதவி விலகினார்

சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் பதவி விலகினார்

2 mins read
8a9b76fb-39a2-4e3a-9af8-028b1c1e0b39
-

கோலா­லம்­பூர்: சிலாங்­கூர் மாநில அம்னோ கட்­சித் தலை­வர் நோ ஒமார் (படம்) பதவி வில­கி­யுள்­ளார். கட்­சி­யின் தேசி­யத் தலை­வர் அக­மது ஸாகிட் ஹமி­டிக்­கும் தமக்­கு­மி­டையே நம்­பிக்கை குலைந்­து­விட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கட்­சித் தலை­வர் ஸாகிட்­தான் தம்மை இந்­தப் பத­விக்கு நிய­மித்­த­தா­க­வும் ஆனால் அண்­மைப் பொதுத்­தேர்­த­லின்­போது அவ­ருக்­குத் தம்­மீது நம்­பிக்கை இல்லை என்­றும் திரு ஒமார் கூறி­னார்.

கட்­சி­யின் மாநி­லத் தலை­வர் என்ற முறை­யில் தேர்­தல் விவ­கா­ரங்­கள் குறித்து விவா­திக்­கத் தமக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என்று கூறிய அவர், வேட்­பா­ளர் பட்­டி­ய­லி­லும் தமது பெயர் இடம்­பெ­ற­வில்லை என்­ப­தைச் சுட்­டி­னார்.

"எனக்கு அது­கு­றித்து வருத்­த­மில்லை. இருப்­பி­னும் இவ்­வ­ளவு நாளாக அம்­னோ­வின் சிலாங்­கூர் பிரி­விற்கு எனது பங்­க­ளிப்பு எது­வுமே இல்லை என்­ப­து­போல அந்த நட­வ­டிக்கை அமைந்­தி­ருந்­தது," என்­றார் திரு ஒமார்.

ஸஃப்ருல் தெங்கு அப்­துல் அசிஸ், கைரி ஜமா­லு­தீன் உள்­ளிட்ட சிலர் புதி­தாக சிலாங்­கூர் மாநி­லத் தொகு­தி­களில் நிறுத்­தப்­பட்­ட­னர். ஆனால் அவர்­கள் அந்த இடங்­களில் தோல்­வி­யைத் தழு­வி­னர் என்று திரு ஒமார் குறிப்­பிட்­டார்.

அம்னோ கட்­சிக் கூட்­டத்­திற்­குப் பிறகு அவர் செய்­தி­யா­ளர்­களிடம் பேசி­னார்.

கட்­சித் தலை­வர் ஸாகிட் உண்­மை­யி­லேயே பெருந்­தன்­மை­யா­ன­வர் என்­றால் அவர் தலை­மைப் பொறுப்­பி­லி­ருந்து வில­க­வேண்­டும் என்று வலியுறுத்திய திரு ஒமார், நாட்­டின் 14வது பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு அம்னோ கட்­சி­யின் அப்­போ­தைய தலை­வர் நஜிப் ரசாக் பதவி வில­கி­ய­தைச் சுட்­டி­னார்.

மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லில் தேசிய முன்­னணி ஓரங்­கட்­டப்­பட்­ட­தை­ய­டுத்து திரு ஸாகிட் பதவி வில­க­வேண்­டும் என்ற குரல் வலுத்­து­வ­ரு­கிறது.