வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் பேத்தி திருமணம்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் பேத்தி திருமணம்

1 mins read
28f0dab0-ac54-4b05-9707-31527554fc6f
திருமணத்துக்காக அலங்கரிக்கப்பட்ட வெள்ளை மாளிகை (இடது), அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மணமகள் நவோமி பைடன், மணமகன் பீட்டர் நீல், அமெரிக்கத் தலைமகள் ஜில் பைடன். படங்கள்: ராய்ட்டர்ஸ், வெள்ளை மாளிகை -
multi-img1 of 2

வாஷிங்­டன்: அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னின் மூத்த பேத்தி நவோமி பைடன், பீட்­டர் நீல் இரு­வ­ரின் திரு­ம­ணம் நேற்று முன்தினம் காலை வெள்ளை மாளி­கை­யின் தென்­பு­றப் புல்­வெ­ளி­யில் நடை­பெற்­றது.

வழக்­க­றி­ஞ­ரான 28 வயது நவோமி, அண்­மை­யில் சட்­டத்­துறை­யில் பட்­டம் பெற்ற 25 வயது பீட்­டர் நீலைக் கரம்­பி­டித்த நிகழ்ச்­சிக்­குத் தனிப்­பட்ட முறை­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. தேசி­யப் பாது­காப்­புக்­கான ஜார்ஜ்­ட­வுன் பல்­க­லைக்­கழக சட்ட நிலை­யத்­தில் நீல் பணி­பு­ரி­கி­றார்.

வெள்ளை மாளிகை வளா­கத்­தில் 1812ஆம் ஆண்­டி­லி­ருந்து நடை­பெற்ற 18வது அதிபர் குடும்பத் திருமணம் இது.

பேத்தியின் திருமணத்திற்கு மறுநாளான நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது 80வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.