வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் அச்சமூக ஊடகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டும் விதமான பதிவுகளைக் காரணம்காட்டி, கடந்த 22 மாதங்களாக அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது.
டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் எலோன் மஸ்க், கருத்துக் கணிப்பில் 15 மில்லியன் பேர் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் திரு டிரம்ப்பின் டுவிட்டர் கணக்குமீதான தடையை நீக்கிஉள்ளார்.
ஆனால் திரு டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த விரும்புவதாகத் தெரியவில்லை.

