டுவிட்டரில் மேலும் ஆள்குறைப்பு

டுவிட்டரில் மேலும் ஆள்குறைப்பு

1 mins read
88d4adbe-ed3f-4db5-bab6-61cc47750032
-

வாஷிங்­டன்: டுவிட்­டர் நிறு­வன ஊழி­யர்­கள் மேலும் பலர் இன்று ஆள்­கு­றைப்­புக்கு ஆளாக நேரி­டும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

நிறு­வ­னத்­தின் தலை­வர் எலோன் மஸ்க் இம்­முறை விற்­பனை, பங்­கா­ளித்­து­வப் பிரி­வு­களைக் குறி­வைக்­கக்­கூ­டும் என்ற கவலை எழுந்­துள்­ளது.

நீண்ட நேரம் வேலை செய்ய ஒப்­புக்­கொண்டு ஊழி­யர்­கள் வேலை­யில் தொட­ர­லாம் அல்­லது இழப்­பீட்­டுத் தொகையை வாங்­கிக்­கொண்டு நிறு­வ­னத்­தில் இருந்து வில­க­லாம் என்ற தெரி­வு­க­ளைத் திரு மஸ்க் வழங்­கி­உள்­ளார். விற்­பனை, பங்­கா­ளித்­து­வப் பிரி­வு­க­ளின் தலை­வர்­கள் ஆள்­கு­றைப்­புக்கு எதிர்ப்பு தெரி­வித்­த­தா­க­வும் அத­னால் அவர்­கள் வேலை­யில் இருந்து நீக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.