43 பேர் வைப்புத் தொகை இழப்பு

அலோர் ஸ்டார்: மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லில், கெடா, பெர்­லிஸ் ஆகிய தேர்­தல் களங்­களில் மொத்­தம் 43 பேர் தேர்­தல் வைப்­புத்­தொ­கையை இழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போட்­டி­யிட்ட தொகு­தி­களில் குறைந்­தது 10 விழுக்­காட்டு மொத்த வாக்­கு­க­ளைப் பெறா­த­வர்­கள் இவ்­வாறு வைப்­புத்­தொகையை இழக்க நேரி­டும்.

இந்த 43 பேரில் 25 பேர் கெடா நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களில் போட்­டி­யிட்­ட­வர்­கள்.

பெர்­லி­சில் நாடா­ளு­மன்­றத் தொகு­திக்­குப் போட்­டி­யிட்ட நால்­வ­ரும் 15 சட்­ட­மன்­றத் தொகு­தி­களுக்­குப் போட்­டி­யிட்ட 18 பேரும் வைப்­புத்­தொ­கையை இழந்­த­னர்.

கெடா­வில் வைப்­புத்­தொகை இழந்­த­வர்­களில் முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­மது, அவ­ரது மகன் முக்­ரிஸ் மகா­தீர் ஆகி­யோ­ரும் அடங்­கு­வர். இவர்­கள் முறையே ஒன்­பது விழுக்­காடு மற்­றும் ஆறு விழுக்­காட்டு வாக்கு­ க­ளைப் பெற்­ற­னர்.

டாக்­டர் மகா­தீ­ரின் 'ஜிடிஏ' கூட்­ட­ணி­யின் அனைத்து 14 வேட்­பா­ளர்­களும் கெடா­வில் வைப்­புத்­தொ­கையை இழந்­த­னர்.

பெர்­லி­சில் வாரி­சான் வேட்­பா­ளர்­கள், 'ஜிடிஏ' கூட்­டணி வேட்­பா­ளர்­கள், சுயேச்சை வேட்­பா­ளர்­கள் எனப் பல­ரும் வைப்­புத்­தொகையை இழந்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!