'அமெரிக்க, இந்திய உறவில் புதிய சகாப்தம்'

'அமெரிக்க, இந்திய உறவில் புதிய சகாப்தம்'

2 mins read
762b818a-95fa-4ea1-8680-946cc0321001
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க, இந்­திய உற­வின் வர­லாற்­றில் 2022 மாபெரும் ஆண்­டாக இருக்­கும். அடுத்த ஆண்டு இதை­விட பெரி­ய­தாக இருக்­கும் என்று வெள்ளை மாளிகை உயர் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் அண்­மை­யில் முடி­வ­டைந்த ஜி-20 உச்­ச­நிலை மாநாட்­டில் கருத்­தி­ணக்­கம் ஏற்­ப­டு­வ­தில் இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி முக்­கி­யப் பங்­காற்­றி­ய­தற்­காக முதன்மை துணை தேசி­யப் பாது­காப்பு ஆலோ­ ச­கரான ஜோன் ஃபைனர் பாராட்டி ­னார்.

அமெ­ரிக்­கா­வும் அதன் அதி­பர் ஜோ பைட­னும் சுமை­யைச் சுமக்க உத­வும், உல­க­ளா­விய நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுத்­துச் செல்­ல பங்­கா­ளி­க­ளைத் தேடும்­போது அந்­தப் பட்­டி­ய­லில் இந்­தி­யா­வும் பிர­த­மர் மோடி­யும் இடம்­பெற்­றுள்­ள­னர் என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஞாயிற்­றுக்கிழமை பல நூறு இந்­திய அமெ­ரிக்­கர்­கள் கூடிய கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

"ஜி-20 உலக மாநாட்­டில் அத­னைக் கண்­கூ­டா­கப் பார்த்­தோம். உலக நாடு­க­ளின் கூட்டு அறிக்­கைக்கு ஒரு­மித்த கருத்தை உரு­வாக்க பிர­த­மர் மோடி உத­வி­யாக இருந்­தார்.

"அணு­வா­யு­தம் தொடர்­பாக அதி­க­ரித்­து­வ­ரும் ஆபத்­தை­யும் இந்­திய அர­சாங்­கம் முன்­னி­லைப் ­ப­டுத்தி சுட்டிக் காட்­டி­யி­ருந்­தது என்­றார் அவர்.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் இந்­தி­யப் பிர­த­மர் மோடி­யும் 15 முறைக்கு மேல் சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர். அண்­மை­யில் பாலித் தீவில் அவர்­கள் கடை­சி­யா­கச் சந்­தித்­துப் பேசி­னர் என்று இந்­திய தூதர் தரன்­ஜித் சிங் சந்து அளித்த மதிய உணவு விருந்து நிகழ்ச்­சி­யில் ஜோன் ஃபைனர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே இந்­தி­யா­வின் எதிர்­கா­லம் முன்­பை­விட பிர­கா­ச­மாக இருப்­ப­தாக அமெ­ரிக்க நாடாளு­மன்ற உறுப்­பி­னர் ஜான் கார்ட்­டர் தெரி­வித்­துள்­ளார்.

"இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்து 75வது ஆண்­டைக் கொண்­டாடி வரு­கிறது. கடந்த காலங்­களில் ஜன­நா­ய­கம், இறை­யாண்­மைக்­கான அதன் கடப்­பாடு அசைக்க முடி­யா­த­தாக இருக்­கிறது. இத­னால் இந்­தி­யா­வின் எதிர்­கா­லம் பிர­கா­ச­மாக உள்­ளது. நூறு கோடிக்­கும் அதி­க­மான மக்­க­ளைக் கொண்ட வலி­மை­யான தேசத்­தைக் கட்­ட­மைக்­கும் பொறுப்பை இந்­தியா வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றி­யுள்­ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்­திய-அமெ­ரிக்க உறவு செழித்­தோங்கி வரு­கிறது. இந்­திய மக்­களை நமது நண்­பர்­க­ளாக ஏற்­றுக் கொண்­ட­தில் பெருமை கொள்­கி­றேன்," என்று திரு ஜான் கார்ட்­டர் கூறி­னார்.