போர்க்கள நினைவில் துப்பாக்கிக்காரனை செம்மையாக தாக்கிய முன்னாள் ராணுவ அதிகாரி

போர்க்கள நினைவில் துப்பாக்கிக்காரனை செம்மையாக தாக்கிய முன்னாள் ராணுவ அதிகாரி

2 mins read
c685ed4c-34d7-4259-9af8-ce09105f5b09
முன்னாள் ராணுவ அதிகாரி ரிச்சர்ட் ஃபியரோ.படம்: நியூயார்க் டைம்ஸ் -

கொலராடோ ஸ்பிரிங்ஸ்: அமெரிக்காவில் கேளிக்கை விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். கொலராடோ ஸ்பிரிங்ஸ் எனும் இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக துப்பாக்கிக்காரன் கைது செய்யப்பட்டான்.

துப்பாக்கிக்காரனின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி அவன் தலையிலும் முகத்திலும் தாக்கி அவனைச் செயலிழக்க வைத்த முன்னாள் ராணுவ அதிகாரி ரிச்சர்ட் ஃபியரோ, அந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார்.

ரிச்­சர்ட் ஃபியரோ என்ற முன்­னாள் ராணுவ அதி­காரி 'கிளப் கியூ' என்ற மன­ம­கிழ் மன்­றத்­தில் தமது மனைவி, மகள், நண்­பர்­க­ளு­டன் நிகழ்ச்சி ஒன்றை ரசித்த வண்­ணம் இருந்­தார். அப்­பொ­ழுது திடீ­ரென துப்­பாக்கிக் குண்டு சத்­தம் அமை­தி­யைக் குலைத்­தது.

நான்கு முறை ஈராக், ஆப்கானிஸ்­தான் நாடு­களில் ராணுவ அதி­கா­ரி­யாக பணி­ய­மர்த்­தப்­பட்ட அனு­ப­வத்­தால் சட்­டென அதை எதிர்­கொண்டு திருப்­பித் தாக்க வேண்­டும் என அவ­ருக்கு தோன்­றி­யது.

அவர் தமது அனு­ப­வத்தை, வீட்­டில் ஒரு­பக்­கம் அவ­ரது மனை­வி­யும் மகளும் துப்­பாக்­கிச்­சூடு காயங்­களைத் தொடர்ந்து குண­ம­டைந்து வரும் நிலை­யில், நேர்­கா­ண­லில் விவ­ரித்­தார் 45 வயது நிரம்­பிய, 2013ஆம் ஆண்டு ராணு­வத்­தில் மேஜ­ரா­கப் பதவி வகித்து ஓய்­வு­பெற்ற ரிச்­சர்ட் ஃபியரோ.

"நான் என்ன செய்­தேன் என எனக்கு சரி­யாக நினை­வில்லை. நான் அப்­ப­டியே போர்க்­கள நிலைக்­குச் சென்­று­விட்­டேன்," என்று தலை­ய­சைத்­த­படி கூறிய ஃபியரோ, "அந்த நபர் நம்­மைக் கொல்­லும் முன் அவ­னைக் கொன்­று­விட வேண்­டும் என்­பது மட்­டுமே எனக்­குத் தெரிந்­தது," என்று விளக்­கி­னார். ஆண்­டர்­சன் லீ ஆல்­டி­ரிச் என்ற 22 வயது துப்­பாக்­கிக்­கா­ரன், ஐந்து பேரைக் கொன்­றது, 18 பேருக்கு காயம் விளை­வித்த குற்­றங்­க­ளுக்­காக காவல்­து­றை­யி­னரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

மன­ம­கிழ் மன்ற வாடிக்­கை­யா­ளர்­கள் இடை­ம­றித்து துப்­பாக்­கிக்­கா­ரனை தடுத்­தி­ருக்­கா­விட்­டால் மரண எண்­ணிக்கை பெரு­ம­ளவு அதி­க­ரித்­தி­ருக்­கும் என்று அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

சம்­ப­வம் குறித்த திரு ஃபியரோ­வின் விவ­ரங்­கள் காவல்­து­றை­யினர், நகர அதி­கா­ரி­கள், மன­ம­கிழ் மன்ற உரி­மை­யா­ளர்­கள் தரும் தக­வல்­க­ளு­டன் ஒத்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

திரு ஃபியரோ­வின் புகைப்­படத்தைப் பார்த்த மன்ற உரி­மை­யா­ளர் நிக் கிர்­ஸெக்கா துப்­பாக்­கிக்­கா­ரனை மடக்­கிய நபர் இவர்­தான் எனக் கூறி­னார்.

துப்­பாக்­கிச்­சூடு ஆரம்­பித்­த­வுடன் நண்­பர் ஒரு­வரை இழுத்து தரை­யில் படுத்­துக்­கொண்­ட­தா­கத் தெரி­வித்­தார். துப்­பாக்­கி­யைக் கொண்டு சர­மா­ரி­யாக சுட்­ட­வன் வாடிக்­கை­யா­ளர்­கள் பயத்­தில் ஓடிய பகு­தியை நோக்கி நகர்­வ­தைக் கண்­ட­தாக கூறி­னார். பதி­னைந்து ஆண்­டு­கள் ராணு­வத்­தில் பணி­பு­ரிந்த திரு ஃபியரோ, இருந்த இடத்­தி­லி­ருந்து வேக­மாக ஓடி துப்­பாக்­கிக்­கா­ரனைப் பிடித்­தார். அவ­னைத் தரை­யில் தள்ளி அவன் மேல் குதித்­தார். "அவன் என்னை நோக்­கிச் சுட்­டானா, சுடு­வ­தற்குத் தயார் ஆனானா என்­ப­தெல்­லாம் எனக்­குத் தெரி­யாது," என்று கூறும் திரு ஃபியரோ, "அவ­னைக் கீழ்ப்படிய வைக்க வேண்­டும் என்­ப­தில்­தான் குறி­யாக இருந்­தேன்," என்று கூறும் ஃபியேரோ பின்­னர் மற்ற மன்ற வாடிக்­கை­யா­ளர்­க­ளை­யும் தமது துணைக்கு அழைத்து துப்­பாக்­கிக்­கா­ர­னின் கையி­லி­ருந்த துப்­பாக்­கி­யைப் பிடுங்கி அவனை செம்­மை­யா­கத் தாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.