சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்

சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்

1 mins read
fd790c21-4813-43c8-b322-203eecc3ddc7
-

ஹொனி­யாரா: சால­மன் தீவு­களில் நேற்று சக்­தி­வாய்ந்த இரண்டு நில­ந­டுக்­கங்­கள் ஏற்­பட்­டன. இதில் ஆஸ்­தி­ரே­லி­யத் தூத­ர­கம், விமான நிலை­யம், கடைத்­தொ­கு­தி­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­தன. அத்­து­டன் சால­மன் தீவு­க­ளின் தலை­ந­க­ரான ஹொனி­யாரா நகர் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்டு, மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பெரிய அள­வில் கட்­ட­டச் சேதமோ, உயிர்ச்­சே­தமோ ஏற்­பட்­டது குறித்து தக­வல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

முதல் நில­ந­டுக்­கம் மாலாங்கோ பகு­தி­யில் இருந்து தென்­மேற்கே 16 கிமீ தொலை­வில் கட­லுக்கு அடி­யில் 15 கிமீ ஆழத்­தில் 7 ரிக்­டர் அள­வில் நிகழ்ந்­த­தாக அமெ­ரிக்க புவி­யி­யல் ஆய்வு நிலை­யம் தெரி­வித்­தது. அரை மணி நேரம் கழித்து அதன் அருகே 6 ரிக்­டர் அள­வில் ஒரு நில­ந­டுக்­கம் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இரண்டு சக்­தி­வாய்ந்த நில­ந­டுக்­கங்­களை அடுத்து சுனாமி எச்­ச­ரிக்கை எது­வும் விடுக்­கப்­ப­ட­வில்லை.

ஆஸ்­தி­ரே­லிய தூத­ர­கத்­தின் கட்­ட­டம் ஒன்று இடிந்­து­வி­ழுந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இருப்­பி­னும் உயிர்ச்­சே­தம், காய­ம­டைந்­தோர் எண்­ணிக்கை குறித்து தக­வல் தெரி­ய­வில்லை.

அதே­போல் அங்­குள்ள ஹொனி­யாரா அனைத்­து­லக விமான நிலை­யத்­தின் கூரை­யும் சேத­ம­டைந்­த­தாக விமான நிலைய ஊழி­யர் ஒரு­வர் கூறி­ய­தாக செய்தி நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தன.