தென்கொரியாவில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் பிளாஸ்டிக் கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதன் பெற்றோரைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
15 மாதக் குழந்தையின் சடலத்தை அதன் பெற்றோர் மூன்று ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தனர் என்று காவல்துறை சந்தேகப்படுகின்றனர்.
குழந்தையின் தந்தை, 29, சிறையில் இருந்த நேரத்தில் குழந்தை இறக்கும்வரை அதன் 34 வயது தாயார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் என்று நம்பப்படுகிறது.
குழந்தை இறந்ததும் சடலத்தை அதன் தாயார் வீட்டிலேயே வைத்திருந்தார்.
சிறையிலிருந்து விடுதலையான அதன் தந்தை, சடலத்தை வேறு மாநிலத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் மறைத்தார்.
கிம்ச்சி வைப்பதற்கான கொள்கலனில் 15 மாதக் குழந்தையை வைத்து, அதை பரணில் மறைத்து வைத்தார்.
கிம்ச்சி, தென் கொரியர்களின் ஊறுகாயாகக் கருதப்படுகிறது.
தென் கொரிய மக்கள் புளிப்பு சேர்க்க உணவில் அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவர்.
தொடர்புடைய செய்திகள்
குழந்தையை யாரும் பாலர்பள்ளியில் சேர்க்கவில்லை என்பதும் அதை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்லவில்லை என்பதும் உள்ளூர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.
சந்தேகத்தின் பேரில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
குழந்தையின் தாயாரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரித்தனர்.
முதலில், குழந்தையைக் காட்டில் கொண்டுசென்று விட்டதாகக் கூறிய அப்பெண், பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டார்.


