ஜெருசலத்தில் வெகுண்டு தாக்குதல்; ஒருவர் மரணம்

ஜெருசலத்தில் வெகுண்டு தாக்குதல்; ஒருவர் மரணம்

1 mins read
f49e26bd-3e6b-46e0-a2b8-ed973c2dae16
-

டெல் அவிவ்: இஸ்­‌ரே­லின் ஜெரு

­ச­லம் நக­ரின் புற­ந­கர் பகு­தி­யில் உள்ள பேருந்து நிறுத்­தங்­களில் இரண்டு வெடி­குண்­டு­கள் வெடித்­தன. இதில் குறைந்­தது ஒரு­வர் மாண்­டார். தாக்­கு­த­லில் குறைந்­தது 14 பேர் காய­முற்­ற­னர். தாக்­கு­

த­லுக்­கு பாலஸ்­தீ­னப் போரா­ளி­கள் கார­ணம் என்று இஸ்­‌ரே­லிய அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர். நக­ருக்கு அரு­கில் இருக்­கும் பேருந்து நிறுத்­தத்­தில் உச்­ச­வே­ளை­யின்­போது முதல் வெடி­குண்டு வெடித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட அரை மணி நேரம் கழித்து மற்­றொரு பேருந்து நிறு­த் தத்­தில் இன்­னொரு வெடி­குண்டு வெடித்­தது. "இத்­த­கைய திட்­ட­மிட்டு நடத்­தப்­படும் தாக்­கு­தல்­கள் கடந்த பல ஆண்­டு­க­ளாக ஜெரு­ச­லத்­தில் நிக­ழ­வில்லை," என்று இஸ்­ரே­லிய காவல்­துறை தெரி­வித்­தது.

வெடி­குண்­டு­கள் பைக்­குள் ஒளித்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக இஸ்­‌ரே­லிய ராணு­வம் கூறி­யது. அதி­க­பட்ச பாதிப்பை ஏற்­ப­டுத்த குறைந்­தது ஒரு வெடி­குண்­டில் ஆணி­கள் பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பேருந்துக்கு அருகில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். படம்: ஏஎஃப்பி