மலேசியாவின் புதிய பிரதமராக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசியப் பங்குகளும் ரிங்கிட்டின் மதிப்பும் உயர்ந்தன.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.28 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 1.7 விழுக்காடு அதிகரித்து, 4.4963 என்ற நிலையை எட்டியது. சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 1.06 விழுக்காடு கூடி 3.2722 ஆனது.
பிற்பகல் 3.14 மணி நிலவரப்படி, கேஎல்சிஐ குறியீடு 3.4 விழுக்காடு உயர்ந்து 1,492.64 என்ற அளவை எட்டியது.
மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, அடுத்த ஐக்கிய அரசாங்கத்தை வழிநடத்தும்.

