அன்வாரின் வீட்டில் பலத்த காவல்துறை பாதுகாப்பு

அன்வாரின் வீட்டில் பலத்த காவல்துறை பாதுகாப்பு

1 mins read
00e04312-2eb9-46a9-8c4f-661df859829e
காஜாங்கில் உள்ள தமது வீட்டிலிருந்து புறப்படும் திரு அன்வார் இப்ராகும். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், காஜாங் சிறுநகருக்கு அருகே உள்ள திரு அன்வார் இப்ராகிமின் வீட்டிற்கு வெளியே பரபரப்பான சூழல் நிலவியது.

பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த அவரது வீட்டில் ஊடகத் துறையினரும் ஆதரவாளர்களும் காணப்பட்டனர்.

பிற்பகல் 3.15 மணிக்கு திரு அன்வாரின் வீட்டிற்கு கறுப்பு 'வோல்வோ' கார்களும் இரு கறுப்பு 'பிஎம்டபுள்யூ' மோட்டார்சைக்கிள்களும் வந்துசேர்ந்தன. கோட் சூட் அணிந்திருந்த நால்வர் அங்கிருந்தனர்.

பிகேஆர் கட்சித் தலைவர்களில் ஒருவரான சம்சுல் இஸ்கந்தர், திரு அன்வாரின் வீட்டிற்கு வெளியே திரண்டிருந்தவர்கள் முன்னிலையில் சிறுது நேரம் பேசினார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தருணம் வந்திருப்பதாக அவர் சொன்னார்.

"அனைவரும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாட்டை மீட்சிப் பாதைக்கு முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்," என்றார் அவர்.