கோலாலம்பூர்: மலேசியப் பிரதமராக அன்வார் இப்ராஹிமின் பதவி ஏற்பின் எதிரொலியாக மலேசியப் பங்குகளும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பும் உயர்ந்துள்ளன.
நேற்று மாலை 5.20 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 1.8 விழுக்காடு அதிகரித்து, 4.4910 என்ற நிலையை எட்டியது. சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 1.2 விழுக்காடு கூடி 3.2687 ஆனது.
நேற்று மாலை நிலவரப்படி, கேஎல்சிஐ குறியீடு 4 விழுக்காடு உயர்ந்து 1,501.88 என்ற அளவை எட்டியது. அன்வார் தலைமையிலான அரசாங்கம் நிலையானதாக இருந்தால் மலேசியப் பங்குகள், ரிங்கிட்டின் மதிப்பு மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

