இந்தியாவுடன் அணுக்க ஒத்துழைப்பு: அன்வார் நம்பிக்கை

இந்தியாவுடன் அணுக்க ஒத்துழைப்பு: அன்வார் நம்பிக்கை

1 mins read
f2d50c47-b352-4901-9cad-4ed5bf452144
பிரதமர் அலுவலகத்தில் திரு அன்வார் இப்ராகிம். படம்: பிரதமர் அலுவலகம் -

இந்தியா ஒரு முக்கியமான பங்காளித்துவ நாடு என்றும் அதனுடன் அணுக்கமாக ஒத்துழைத்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாகவும் புதிய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் 10வது பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் வாழ்த்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து திரு அன்வார் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

திரு அன்வார் தமது பதில் டுவிட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியா, மலேசியாவின் முக்கிய பங்காளித்துவ நாடு. வர்த்தகம், முதலீடு, கலாசாரம் போன்றவற்றில் உங்களுடன் அணுக்கமாக ஒத்துழைத்து உறவுகளை வலுப்படுத்த நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்றார்.

முன்னதாக, அன்வார் இப்ராகிமுக்கு வாழ்த்துக் கூறிய திரு மோடி, மலேசியாவுடன் அணுக்கமாகப் பணியாற்றி, இந்தியா-மலேசியா மேம்பட்ட உத்திபூர்வ பங்காளித்துவ உறவு முறையை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவித்திருந்தார்.