ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து தைவான் அதிபர் விலகல்

ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து தைவான் அதிபர் விலகல்

1 mins read
bc0eed21-560f-4e8c-bbc3-ae72c26fc924
செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வரும் தைவான் அதிபர் சாய் இங் வென். படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

தைவானில் ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து அதிபர் சாய் இங் வென் விலகியுள்ளார். இன்று சனிக்கிழமை நடந்த உள்ளூர் தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

தலைநகர் தைப்பேயில் நடந்த நகராட்சித் தேர்தலில் திருவாட்டி சாயின் ஜனநாயக முன்னேற்றக் கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த திரு சியாங் வான் ஆன் இதில் வென்றார்.

தாம் வெற்றி அடைந்துள்ளதாக திரு சியாங் கூறி பின்னர் ஒரு மணி நேர கழித்து, தோல்விக்குப் பொறுப்பேற்கும் விதமாக ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக திருவாட்டி சாய் அறிவித்தார்.