பிரேசிலியா: பிரேசில் நாட்டின் இரண்டு பள்ளிக்கூடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் மூன்று பேர் மாண்டுவிட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
அந்நாட்டின் எஸ்பிரிட்டோ சான்டோ மாநிலத்தின் அராகுரூஸ் என்ற நகரில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவங்கள் நடந்தன. தாக்குதல் நடத்தியதாக சந்தேதிகிக்கப்படும்
16 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சம்பவத்தன்று முதலில் தனது முன்னாள் பள்ளிக்கூடத்திற்குச் சென்ற அந்த தாக்குதல்காரர் ஆசிரியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் இருவர் மாண்டதாகவும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
அதன் பிறகு அருகில் இருந்த தனியார் பள்ளிக்கூடத்திற்குள் சென்ற அதே நபர், அங்கு பதின்ம வயது பெண் ஒருவரைச் சுட்டுக்கொன்றார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

