தைவானில் முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

தைவானில் முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

1 mins read
e8d91a4b-bef3-46d3-98b4-87e29e442b43
-

தைவானில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அந்நாட்டின் எதிர்க்கட்சியான கோமிண்டாங்கின் சியாங் வான்-ஆன் (நடுவில்) வெற்றி பெற்றுள்ளார். 43 வயது சியாங், ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான சென் சி சுங்கையும் சுயேட்சை வேட்பாளரும் முன்னாள் துணை மேயருமான ஹவன் சான்-சான்னையும் தோற்கடித்தார். இத்தேர்தலில் கிட்டத்தட்ட 19 மில்லியன் பேர் வாக்களித்தனர். படம்: ஏஎஃப்பி