கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் போராட்டம்

கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் போராட்டம்

1 mins read
580b5d7d-33fa-41fd-9161-40cb21b9e9fe
கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பாளர்கள் ஈடுபட்டனர். படம்: வீபோ -

தீ விபத்தின்போது தப்பிக்க முடியாமல் திணறிய மக்கள்

பெய்­ஜிங்: சீனா­வின் மேற்கு ‌ஜின்­ஜி­யாங் மாநி­லத்­தில், கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு எதி­ராக போராட்­டம் வெடித்­தது.

சீனா­வில் கடந்த மூன்று நாளாக கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை பெரு­ம­ளவு அதி­க­ரித்து வரு­கிறது. எனவே, அங்கு கட்­டுப்­பா­டு­கள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக, ஜின்­ஜி­யாங் மாநி­லத்­தில் உள்ள 4 மில்­லி­யன் பேர் வசிக்­கும் உரும்கி நக­ரில் மக்­கள் கடந்த 100 நாட்­க­ளாக வீடு­க­ளுக்கு உள்­ளேயே முடங்கி உள்­ள­னர்.

அங்கு மட்­டும் கடந்த இரண்டு நாள்­களில் 100க்கும் மேற்­பட்­ட­வர்­கள் தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

இந்நிலையில், அங்கு கட்­ட­டம் ஒன்­றில் ஏற்­பட்ட தீ விபத்­தில் 10 பேர் சம்­பவ இடத்­தி­லேயே உடல் கருகி உயி­ரி­ழந்­த­னர். எட்­டுக்­கும் மேற்­பட்­டோர் படு­கா­யங்­க­ளு­டன் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக அக்­கட்­ட­டத்­தின் பல பகு­தி­கள் அடைக்­கப்­பட்­டி­ருந்­த­தால், தீ விபத்து ஏற்­பட்­ட­போது மக்­க­ளால் வெளி­யேற முடி­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. ஆனால், சீன அதி­கா­ரி­கள் இக்­குற்­றச்­சாட்டை மறுக்­கின்­ற­னர்.

தீ விபத்­தைத் தொடர்ந்து கோப­ம­டைந்த அப்­ப­குதி மக்­கள் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு எதி­ராக போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது, "ஊர­டங்கை முடிவுக்கு கொண்டு வாருங்கள். எங்­க­ளுக்கு சுதந்­தி­ரம் வேண்­டும்," என அவர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.