'புதிய திரிபு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்'

'புதிய திரிபு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்'

1 mins read
f6da2185-12cc-43e6-a4b4-16931360ca67
-

டர்­பன்: கொவிட்-19 கிரு­மி­யின் புதிய திரிபு மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று தென்னாப்­பி­ரிக்க ஆய்­வ­கம் ஒன்­றின் ஆய்வு கூறு­கிறது.

நோயெ­திர்ப்பு சக்தி குறை­வாக உள்­ள­வர்­க­ளி­ட­மி­ருந்து எடுக்­கப்­பட்ட கொவிட்-19 மாதி­ரி­களை ஆய்வு செய்த பிறகு, புதிய திரிபு அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூடி­ய­தாக உரு­வெ­டுக்கும் என்று அது கூறு­கிறது. ஒமிக்­ரான் திரி­பைக் காட்­டி­லும் அது கடு­மை­யான உடல்நல பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்று கடந்த ஆறு மாத கால­மாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு காட்­டு­கிறது.

தொடக்­கத்­தில், ஆய்வு மாதி­ரி­கள், ஓமிக்­ரான் பிஏ.1 கிரு­மியை போன்று இருந்­தா­லும் ஆறு மாத காலத்­தில், அது சீனா­வின் வூஹான் நக­ரில் முத­லில் கண்­டறி­யப்­பட்ட தீவி­ர­மான கிருமியைப் போன்று­ மாறி­ய­தா­க­வும் ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

எனவே, புதிய திரிபு கடு­மை­யான உடல்­நல பாதிப்­பை­யும் அதி­க­மான உயி­ரி­ழப்­பு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று கூறப்­படு­கிறது.