புதிய அமைச்சரவையில் பாரிசான் நே‌ஷனல் இடம் கேட்கக்கூடாது: விக்னேஸ்வரன்

கோலா­லம்­பூர்: பக்­க­தான் ஹரப்­பா­னு­டன் இணைந்து அர­சாங்­கம் அமைக்க ஒப்­புக்­கொண்­டுள்ள போதும், பாரி­சான் நே‌ஷ­னல் அமைச்­ச­ர­வை­யில் இடம் கேட்­கக்­கூ­டாது என்று மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் விக்­னேஸ்­வ­ரன் கூறி­யுள்­ளார்.

டிஏபி அல்­லது பக்­கத்­தான் ஹரப்­பா­னின் தலை­வ­ரும் பிர­த­ம­ரு­மான அன்­வாரு­டன் இணைந்து பணி­யாற்­றக்­கூ­டாது என்று பாரி­சான் நே‌ஷ­னல் தேர்­த­லுக்கு முன்பு முடிவு செய்­தி­ருந்­ததே இதற்கு கார­ணம் என்று விக்­னேஸ்­வ­ரனை மேற்­கோள்­காட்டி மலே­சி­யா­கினி ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

"டிஏபி வேண்­டாம், அன்­வார் வேண்­டாம், பெர்­சத்து வேண்­டாம்' என்ற அம்னோவின் முடிவு இன்­னும் பொருந்­தும். அது பாரி­சா­னி­லும் ஒப்­புக்­கொள்­ளப்­பட்­டது. அத­னால்­தான் பாரி­சான் முன்பு நடு­நிலையாக இருந்து அர­சாங்­கத்­தில் சேரவில்லை.

"ஆனால், மன்­ன­ரின் ஆலோ­ச­னை­யைத் தொடர்ந்து, ஐக்­கிய அர­சாங்­கத்­தின் கீழ் அன்­வாரை ஆத­ரிப்­ப­தற்­காக பாரி­சான் தனது நிலைப்­பாட்டை மாற்­றி­யது," என்று விக்­னேஸ்­வ­ரன் சொன்­னார்.

எனி­னும் அன்­வார் தனது அமைச்­ச­ர­வை­யைத் தேர்ந்­தெ­டுக்க சுதந்­தி­ரம் கொடுக்­கப்­பட வேண்­டும் என்ற விக்­னேஸ்­வ­ரன், பாரி­சானுக்கு அமைச்­ச­ர­வை­யில் இடம்­கொ­டுக்க அன்­வார் முடிவு செய்­தால், அதை ஏற்­றுக்­கொள்­ள­லாம் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!