கடற்கரையில் நிர்வாணமாகக் கூடிய ஆயிரக்கணக்கானோர்

கடற்கரையில் நிர்வாணமாகக் கூடிய ஆயிரக்கணக்கானோர்

1 mins read
2ba8cbc1-88ab-465d-8c7d-f548eb518c8c
படம்: ஏபி -
Google News Preferred Icon

ஆஸ்திரேலியாவின் பிரபல போண்டாய் கடற்கரையில் சுமார் 2,500 பேர் வாரயிறுதி அன்று கூடினர். அவர்கள் அனைவரும் நிர்வாணக் கோலத்தில் கடற்கரையில் திரண்டிருந்தனர். உல்லாசமாக கடலில் குளிப்பதற்கோ போராட்டத்தில் ஈடுபடுவதற்கோ அல்ல. எல்லாம் ஒரு நல்ல காரியத்திற்காகத்தான் அவர்கள் தங்கள் ஆடைகளைத் துறந்தனர்.

தோல் புற்றுநோய் குறித்து கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலைப்படைப்பில் பங்கெடுக்க அவர்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர்.

கலைஞர் ஸ்பென்சர் துனிக்கின் கலைப்படைப்பிற்காக கடற்கரையில் நிர்வாணத்தை அனுமதிக்க சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டிருந்தன.

காலை 3:30 மணிக்கு பங்கேற்பாளர்கள் கடற்கரையில் ஒன்று திரண்டு தங்கள் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக காட்சியளித்தனர்.

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆக மோசமான நாடுகளில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. அங்குள்ள மக்களை அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு செல்ல ஊக்குவிப்பது இந்தக் கலை படைப்பின் நோக்கம்.

ஒவ்வோர் ஆண்டும் 2,500 பேர் தோல் புற்றுநோயால் மடிகின்றனர். இதைக் குறிக்கும் வகையில் கலைப் படைப்பில் 2,500 பேர் கலந்துகொண்டனர்.