சீனாவில் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்: அதிபர் பதவி விலக கோரிக்கை

சீனாவில் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்: அதிபர் பதவி விலக கோரிக்கை

1 mins read
541fcd10-c053-47b5-beb6-b48656f5e591
படம்: சீன சமூக ஊடகம் Weibo -

சீனாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வலுபெற்றுவருகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

ஷாங்காய் நகரில் பல்லாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஸி ஜின்பிங் பதவியிலிருந்து விலகும்படி பலர் முழக்கங்கள் எழுப்பினர்.

உரும்சி நகரில் கட்டடம் ஒன்றில் தீ மூண்டதில் பத்து பேர் மாண்டனர். கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால் மக்கள் கட்டடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் பல மாநிலங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெய்ஜிங்கில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்பதும், நாடு வழக்கநிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதும் அவர்களுடைய கோரிக்கை.

சீனாவில் ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்பபோது நடந்தாலும், அரசாங்கத்துக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது அரிது.