அமைச்சர் பதவி ஆதரவுக்கான வெகுமதி அல்ல: அன்வார்

அமைச்சர் பதவி ஆதரவுக்கான வெகுமதி அல்ல: அன்வார்

1 mins read
48f5ebdb-eab3-48c6-abad-5e69b91bf7aa
அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று அன்வார் கூறியுள்ளார். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

புத்­ரா­ஜெயா: மலே­சிய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், தனது அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு அளிப்­ப­தற்­காக அமைச்­சர் பதவி வெகு­ம­தி­யாக வழங்­கப்­ப­ட­வில்லை என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

பக்­கத்­தான் ஹரப்­பான், பாரி­சான் நேஷனல், கபுங்­கான் சர­வாக் கட்சி ஆகிய மூன்று முக்­கிய கூட்­டணிக­ளு­டன் அமைச்­சர் நிய­ம­னங்­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­படும் என்­றார்.

அமைச்­சர்­கள் எண்­ணிக்கை, அமைச்­சர்­க­ளின் சம்­ப­ளம் ஆகிய இரண்­டை­யும் குறைக்க அவர் உறுதி தெரி­வித்­தார்.

"அமைச்­ச­ரவை அள­வைக் குறைக்க விரும்­பு­கி­றேன். அமைச்­சர் பதவி வெகு­ம­தி­யாக அளிக்­கப்­படும் போக்கை தொடர விரும்­ப­வில்லை. என்னை ஆத­ரிப்­ப­தற்­காக அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கு அமைச்­சர் பதவி தர விரும்­ப­மில்லை," என்று வாழ்க்­கைச் செலவு தொடர்­பான தேசிய செயற்­கு­ழு­வின் சிறப்­புக் கூட்­டத்­திற்கு தலைமை தாங்­கிய பிறகு செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் தெரி­வித்­தார்.

"ஊழ­லுக்கு எதி­ரான கடப்­பாடு, தேசிய பொரு­ளி­யல் வளர்ச்சி ஆகி­ய­வற்­றுக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் வகை­யில் புதிய அர­சாங்­கம் அமைக்­கப்­படும்.

"என்­னு­டைய கொள்­கை­கள், ஊழ­லற்ற அர­சாங்­கம் அமைப்­ப­தற்­கான என்­னு­டைய கடப்­பாடு, பொரு­ளி­ய­லுக்கு புத்­து­யி­ரூட்­டு­தல் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் எனக்கு ஆத­ரவு அளிப்­ப­தையே நான் விரும்­பு­கி­றேன்," என்று அன்­வார் மேலும் தெரி­வித்­தார்.

இதற்கு முன்­னர் அமைச்­ச­ர­வையை சிறி­ய­தாக வைத்­தி­ருக்­க­வும் அமைச்­சர்­கள் தங்­க­ளு­டைய சம்­ப­ளத்­தைக் குறைக்­க­வும் அன்­வார் விருப்­பம் தெரி­வித்­தி­ருந்­தார்.

முந்­தைய அர­சாங்­கத்­தில் 31 அமைச்­சர்­கள் இருந்­த­னர். ஆனால் புதிய அமைச்­ச­ர­வை­யில் அதி­க­பட்­ச­மாக 25 அமைச்­சர்­கள் இருப்­பார்­கள் என அன்­வார் முன்பு சொல்­லி­யி­ருந்­தார்.