பெக்கான்: பாகாங் மாநிலத்தின் பாரிசான் நேஷனல் கூட்டணியின் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், பாகாங் மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
மூன்று கூட்டணிகளுக்கும் ஆட்சியமைப்பதற்கு போதுமான இடங்கள் இல்லை.
எனவே பாரிசான் நேஷனல், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் இணைந்து அங்கு அரசாங்கத்தை அமைக்கின்றன. "பக்கத்தான் ஹரப்பானுடன் ஆன இந்தக் கூட்டணி உடன்பாட்டால் மாநிலத்தில் நிலைத்தன்மையையும் வளத்தையும் கொண்டுவர முடியும்.
"அத்துடன் இந்த உடன்பாடு மாநிலத்தின் வலுவான பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிர்வாகமும் திட்டமிடலும் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய இந்தக் கூட்டணி வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்," என்று முதலமைச்சர் ரோஸ்டி கூறினார்.

