‘ரஷ்ய தாக்குதல் தொடரும்’

நாட்டு மக்களுக்கு ஆற்றிய காணொளி உரையில் உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கவலை

ரஷ்யா தனது நாட்­டின் மீது புதிய தாக்­கு­தல்­கள் நடத்­தத் திட்­ட­மிட்டு வரு­வ­தா­கக் கூறிய உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி, கடும் குளிர்­கால தற்­போ­தைய சூழ­லில், நாட்டு மக்­க­ளை­யும் தற்­காப்­புப் படை­யி­ன­ரை­யும் மின்­சார கட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­கு­தலை பொறுத்­துக் கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அண்­மைய வாரங்­களில் ரஷ்யா உக்­ரே­னின் முக்­கிய உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளைக் குறி­வைத்து தாக்குதல் மேற்கொண்டு வந்­துள்­ளது. இத­னால் மின்­சார வச­திக்கு இடை­யூறு ஏற்­பட்­ட­து­டன் அப்­பா­விப் பொது­மக்­களும் மர­ண­ம­டைந்­துள்­ள­னர்.

இதில் கடந்த புதன்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­கள் பெரு­ம­ளவு சேதம் ஏற்­ப­டுத்­தி­ய­து­டன் தட்­ப­வெப்ப நிலை செல்­சி­யஸ் பூஜ்யம் ஆன நிலை­யில், மில்­லி­யன் கணக்­கான மக்­கள் வெளிச்­சம், தண்­ணீர், வெப்­ப­மூட்­டும் வசதி இன்றி தவிக்­கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­ட­னர்.

"பயங்­க­ர­வா­தி­கள் புதிய தாக்­கு­தல்­களை நடத்­தத் திட்­ட­மிட்­டுள்­ள­னர், இது எங்­க­ளுக்­குத் தெரி­ய­வந்­துள்ள உண்­மைத் தக­வல்," என்று ஞாயி­றன்று நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய காணொளி உரை­யில் அதி­பர் ஸெலன்ஸ்கி கூறி­னார்.

"மேலும், அவர்­கள் கையில் ஏவு­க­ணை­கள் உள்­ள­வரை அவர்­கள், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அமைதி காக்க மாட்­டார்­கள்," என்று தெரி­வித்­தார்.

வரும் வாரம் இதற்கு முந்­தைய வாரம் போலவே சிர­ம­மான ஒன்­றாக இருக்­கக்­கூ­டும் என்று அவர் சொன்­னார்.

உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்­கி­யின் உரைக்கு ரஷ்­யா­வி­ட­மி­ருந்து எவ்­வித பதி­லும் இல்லை.

இந்­நி­லை­யில், உக்­ரே­னி­யத் தலை­ந­கர் கியவ்­வில் பனிப்­பொ­ழிவு ஏற்­பட்­டுள்­ள­து­டன் தட்­ப­வெப்ப நிலை உறை­பனி நோக்­கிச் சென்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால், மின்­சார விநி­யோ­கத்­துக்கு இடை­யூறு, பனிக்­கால குளிரை ஈடு­கட்ட வீடு­க­ளுக்­கான வெப்­ப­மூட்­டும் வசதி ஆகி­யவை இன்றி மக்­கள் போராடி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கியவ் நகர அதி­கா­ரி­கள் மின்­சார கட்­ட­மைப்பை சீர் செய்­யும் பணியை நிறைவு செய்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. ஆனால், பொது­மக்­க­ளின் தேவை அதி­க­மாக இருப்­ப­தால், ஓர­ளவு தட்­டுப்­பாடு இருக்­கவே செய்­யும் என்று கூறப்­ப­டு­கிறது. இதற்­கி­டையே, மின்­சா­ரக் கட்­ட­மைப்­பின் மீது தான் நடத்­திய தாக்­கு­தல் பொது­மக்­க­ளைக் குறி­வைத்து அல்ல என்று ரஷ்யா கூறி­யுள்­ளது. உக்­ரேன் விரும்­பி­னால் அது தனது கோரிக்­கை­க­ளுக்கு இணங்கி இந்­தப் போரை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­து­டன் தன் நாட்டு மக்­கள் படும்­பாட்டை ஒரு முடி­வுக்­குக் கொண்டு வர­லாம் என்­றும் ரஷ்யா கூறி­யது.

எனி­னும், ரஷ்யா தான் ஆக்­கி­ர­மித்­துள்ள உக்­ரே­னிய நாட்­டுப் பகு­தி­கள் பேச்­சு­வார்த்­தைக்கு உட்­பட்­ட­தல்ல என்று கூறும் நிலை­யில், உக்­ரே­னிய நாட்­டின் இறை­யாண்மை பேச்­சு­வார்த்­தைக்கு உரி­ய­தல்ல, அத­னால் பேச்­சு­வார்த்­தைக்கு தான் உடன்­ப­டப் போவ­தில்லை என்­றும் விளக்­கி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!