'கனமழையால் மலேசியாவில் காய்கறி விலை இரட்டிப்பாகும்'

'கனமழையால் மலேசியாவில் காய்கறி விலை இரட்டிப்பாகும்'

2 mins read
eb99a032-6f0d-46bb-9d8b-62627eefc7eb
-

ஈப்போ: மலே­சி­யா­வில் ஆண்­டி­றுதி பரு­வ­மழை பெய்து வரு­வ­தால் கேம­ரான் மலைப் பகு­தி­யில் காய்­கறி விளைச்­சல் பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர். ஏற்­கெ­னவே ஆள் பற்­றாக்­கு­றைப் பிரச்­சி­னையை விவ­சா­யி­கள் எதிர்­நோக்கி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் மோச­மான வானி­லை­யால் அவர்­கள் மேலும் அவ­திக்­குள்­ளா­கி­யுள்­ள­னர். இதை­ய­டுத்து மலே­சி­யா­வில் காய்­க­றி­க­ளின் விலை 50 விழுக்­காடு அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மோச­மான வெப்­ப­நிலை மற்­றும் குறைந்த அள­வி­லான மக­ரந்­தச் சேர்க்கை ஆகிய கார­ணங்­க­ளால் காய்­கறி உற்­பத்தி வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என கேம­ரன் மலைப்பகுதி உற்­பத்­தி­யா­ளர்­கள் சங்­கத்­தின் செய­லா­ளர் சாய் ஈ மோங் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

கடந்த சில நாட்­க­ளாக தொடர்ச்­சி­யாக கன­மழை பெய்து வரு­கிறது. இத­னால் அங்கு ஏற்­பட்­டுள்ள மோச­மான வானிலை நில­வ­ரம் காய்­கறி விளைச்­ச­லில் நீண்ட தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் திரு சாய் கூறி­னார்.

கேம­ரன் மலைப் பகு­தி­யில் எப்­போ­தும் வானம் மேக­மூட்­ட­மா­கக் காணப்­ப­டு­வ­தால் காய்­கறி உற்­பத்தி வெகு­வா­கக் குறை­யும். அதை­ய­டுத்து சில காய்­க­றி­க­ளின் விலை­யேற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்­றும் அவர் கூறி­னார்.

காய்­க­றி­க­ளுக்கு ஏற்ப 30 விழுக்­காட்­டில் இருந்து 50 விழுக்­காடு வரை விலை ஏறக்­கூ­டும். குறிப்­பாக தக்­காளி, மிள­காய், குட­மி­ள­காய், பீன்ஸ், வெள்­ள­ரிக்­காய், செடி­க­ளாக வளர்க்­கப்­படும் கீரை வகை­கள் ஆகி­ய­வற்­றின் விலை கணி­ச­மாக ஏறக்­கூ­டும்.

இருப்­பி­னும் பச­லைக் கீரை, முட்­டைக்­கோஸ் உள்­ளிட்ட 80 வகைக் காய்­க­றி­க­ளின் விலை­களில் அதிக ஏற்­றம் இருக்­காது என்று திரு சாய் கூறி­னார்.

இருப்­பி­னும் காய்­கறி உற்­பத்தி வரும் ஜன­வரி மாதம் முதல் பரு­வ­நி­லைக்­கேற்ப வழக்­க­நி­லைக்­குத் திரும்­பும் என்று தாம் நம்­பு­வ­தாக திரு சாய் தெரி­வித்­தார்.

காய்­க­றி­கள் தட்­டுப்­பாடு நில­வும் போது முட்­டை­களை மக்­கள் விரும்பி வாங்­கக் கூடும். எனவே முட்­டை­க­ளுக்­கான தேவை முன்­பிருந்­த­தைக் காட்­டி­லும் அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

ஏற்­கெ­னவே இந்த ஆண்­டில் முட்­டை­யின் தேவை அதி­க­ரிப்பை ஈடு­கட்­டும் வகை­யில் முன்­கூட்­டியே கடந்த செப்­டம்­பர் மாதத்­தில் இருந்து சில திட்­டங்­கள் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்­டன என்று விவ­சா­யம் மற்­றும் உண­வுத் தொழில்­துறை அமைச்­சின் பொதுச்­செ­ய­லா­ளர் ஹஸ்­லினா அப்­துல் ஹமித் தெரி­வித்­துள்­ளார்.