முன்னாள் பிரதமர் சப்ரி: $190 மில்லியனுக்கு கணக்கே இல்லை என்பது பொய்த் தகவல்

முன்னாள் பிரதமர் சப்ரி: $190 மில்லியனுக்கு கணக்கே இல்லை என்பது பொய்த் தகவல்

2 mins read
0e76b308-0089-404e-aa6c-ccf45a387101
-

கோலாலம்பூர்: மலேசியாவின் நிதித் துறை செலவிட்ட 620 பில்லியன் ரிங்கிட் ($190 மில்லியன்) பணத்திற்குக் கணக்கு எதுவும் இல்லை என்று கூறப்படுவது பொய்த் தகவல் என்று அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (படம்) தெரிவித்து உள்ளார்.

அனைத்து செல­வி­னங்களும் அர­சாங்­கக் கணக்குகளில் பதி­யப்­பட்டு உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார். the handle @mohayusba என்ற முக­வ­ரி­யைப் பயன்­ப­டுத்­தும் யூசோப் பாசெக் என்­ப­வர் பதி­வேற்­றிய ஒரு தக­வலை தனது சமூக ஊட­கப் பக்­கத்­தில் குறிப்­பிட்ட திரு இஸ்மாயில், அந்­தத் தக­வல் பொய் என்று தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் கொவிட்-19 கிருமிப் பர­வ­லைத் தடுக்க கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வு­கள் பிறப்­பிக்­கப்­பட்ட கால­கட்­டத்­தின்­போது அதா­வது 2020ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சு 620 பில்­லி­யன் ரிங்­கிட் பணத்­திற்கு கணக்கு எது­வும் பதி­ய­வில்லை என்று தனது பதி­வில் திரு யூசோப் தெரி­வித்து இருந்­தார்.

முன்­னாள் பிர­த­மர்­க­ளான முகை­தீன் யாசி­னும் திரு இஸ்­மா­யி­லும் மற்­ற­வர்­கள் யாரும் பிர­த­ம­ராக வந்­து­வி­டக் கூடாது என்று விரும்­பினார்­கள் என்றும் இதற்கு அதுவே கார­ணம் என்றும் திரு யூசோப் மேலும் தெரி­வித்து இருந்­தார். இதற்­குப் பதி­ல­ளித்த முன்­னாள் பிர­த­மர் இஸ்­மா­யில், கொவிட்-19 கால­கட்­டத்­தின்­போது அர­சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்­திய எட்டு திட்­டங்­க­ளின் மொத்த மதிப்பு 530 பில்­லி­யன் ரிங்­கிட் என்று தெரி­வித்­தார். அதில் பெரும் பகுதி அர­சாங்­கச் செல­வி­னம் அல்ல என்­றும் அவர் கூறி­னார்.

அர­சாங்­கம் நேர­டி­யா­கச் செல­விட்ட தொகை 10 பில்­லி­யன் ரிங்­கிட்­தான். இதற்கு நாடா­ளு­மன்­றம் ஏக­ம­ன­தாக அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

மலே­சி­யா­வில் 2020ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி பிர­த­ம­ராக இருந்த முகை­தீன் யாசின், கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளைச் சமா­ளிக்க பொரு­ளி­ய­லுக்கு உதவ கூடு­த­லாக 620 மில்­லி­யன் ரிங்­கிட் செல­வி­டப்­படும் என்று அறி­வித்து இருந்­தார்.