பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் புதிய அமைச்சரவையை இறுதி செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். பல கட்சிகள் சேர்ந்து உருவானதே ஐக்கிய அரசாங்கம். எனவே, நான் அனைத்துக் கட்சித் தரப்பில் இருந்து வரும் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும்.
இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினையே அமைச்சரவையை சிறியதாக்குவதே. அமைச்சரவை நியமனங்கள் தொடர்பான முந்தைய நடைமுறையில் பல நியமனங்கள் செய்யப்பட்டன. ஆனால், அதுபோன்ற நடைமுறையை பின்பற்ற நான் தயாராக இல்லை என்று கூறினார்.

