உலகக் கிண்ணம் 2022: ஈரான் தோல்வியடைந்ததைக் கொண்டாடினர் ஈரானியர்கள்

உலகக் கிண்ணம் 2022: ஈரான் தோல்வியடைந்ததைக் கொண்டாடினர் ஈரானியர்கள்

1 mins read
d85ccf15-d030-4244-8cc7-6e224dde9a9d
மக்கள் சாலைகளில் ஆடிப், பாடி மகிழும் காட்சிகள் டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. (டுவிட்டர்) -
Google News Preferred Icon

உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட்டுள்ளது. குழுப் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவிடன் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறத் தவறியது.

தோல்வியின் சோகத்தில் ஆழ்ந்துவிடாமல், குதூகலத்தில் கொண்டாடிவருகின்றனர் ஈரானியர்கள். மக்கள் சாலைகளில் ஆடிப், பாடி மகிழும் காட்சிகள் டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்களில் மூழ்கியிருந்த ஈரானில் இவ்வளவு மகிழ்ச்சியா என்று ஐயம் எழுந்துள்ளது. இதுவும் ஒருவகை போராட்டம்தான் என்று ஈரானிய மக்கள் கூறுகின்றனர்.

ஆட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பல நகரங்களில் வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. பலர் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தனர்.

ஈரான் காற்பந்து அணியும் தங்கள் பங்கிற்கு இங்கிலாந்துடனான தொடக்க ஆட்டத்தில் ஈரானிய தேசிய கீதத்தை பாட மறுத்தனர். இதை சிலர் வரவேற்றாலும், பலர் தங்கள் காற்பந்து அணி அரசாங்கத்தைப் பிரதிபலிப்பதாகக் குறைகூறுகின்றனர்.