குவாங்ஷோவிலும் தீவிரமான கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வெடித்துள்ள நிலையில் நாட்டைச் சீரழிக்கும் விரோத சக்திகளை முறியடிப்போம் என சீன கம்யூனிச அரசாங்கம் சூளுரைத்துள்ளது.
ஷாங்காய்: கொவிட்-19 கடுமையான கட்டுப்பாடுகளால் குவான்ஷோவில் உள்ள மக்களும் கொதிப் படைந்துள்ளனர். தயாரிப்புத் துறையின் மையமாக விளங்கும் அங்கு, எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கும் கலவரத் தடுப்பு காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.
சீனா தனது நாட்டில் கொவிட்-19 தொற்றை முற்றிலும் ஒழித்துக் கட்ட உறுதி பூண்டுள்ளது. இதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் கட்டுப்பாடுகளால் சலிப்படைந்த மக்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வார இறுதியில் தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சில பல்கலைக் கழகங்களில் வெற்றுத்தாளைக் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கட்டுப்பாடுகளால் வாய் பேச முடியாமல் இருக்கிறோம் என்பதை அடையாளமாகக் காட்டினர்.
டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவான காணொளிகள், பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவுவதைக் காட்டின.
ஒரு காணொளியில் கைவிலங் கிடப்பட்ட மக்களை காவல்துறையினர் வரிசையாக அழைத்துச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்தச் சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றிய விவரமில்லை.
இதற்கிடையே நாட்டைச் சீரழிக்கும் விரோத சக்திகளை முறியடிப் போம் என்று சட்ட அமலாக்கத்துக்கு பொறுப்பு வகிக்கும் கம்யூனிசக் கட்சியின் உயர்மட்ட அமைப்பு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பையும் சமூக நிலைத்தன்மையையும் கட்டிக்காக்க தயங்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அது சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளது.
சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் சட்டவிரோத குற்றச் செயல்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சட்ட விவகார மன்றத்தின் அறிக்கை தெரிவித்தது.
இந்த நிலையில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை நசுக்கக் கூடாது என்று சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
"அமைதியாகப் போராட சீன மக்களுக்கு உரிமையிருக்கிறது என்பதை நம்புகிறோம். தங்களுடைய சொந்த கருத்துகளைக் கொண் டிருக்க அவர்களுக்கு உரிமையிருக் கிறது. இந்த அடிப்படை உரிமைதான் உலகம் முழுவதும் இருக்கிறது. அந்த உரிமையை பறிக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

