செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
d768b56d-87df-4b2a-997f-046528bdfbbc
-
Google News Preferred Icon

அமைச்சர்களுக்கு சுமை அதிகரிக்கும்: அம்னோ

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய பிரதமரான அன்வார் இப்ராஹிம் தனது அமைச்சரவை சிறியதாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். அமைச்சர்களின் சம்பளமும் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமைச்சரவை சிறியதாக இருந்தால் அமைச்சர்களுக்கு சுமை அதிகரிக்கும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இஷாம் ஜலீல் கூறியுள்ளார். சிறிய அமைச்சரவை காரணமாக பல அமைச்சுகள் இணைக்கப்படுவதால் பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் அமைச்சுகளின் செயல்பாடுகளை மதிப்பிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

இரு ராணுவ வீரர்களுக்கு

ஏழு மாத சிறைத் தண்டனை

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பாலியல் உறவில் ஈடுபட்ட இரு ராணுவ வீரர்களுக்கு இம்மாதம் 9ஆம் தேதி ராணுவ நீதிமன்றம் ஏழு மாத சிறைத் தண்டனை விதித்தது.

ராணுவத்தில் ஓரினப்புணர்ச்சி தடை செய்யப்பட்டாலும் பொதுவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.

இரு ராணுவ வீரர்களின் பாலியல் உறவை தகாத செயல் என்று ராணுவம் குறிப்பிட்டுள்ளது.